என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக விபத்து தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
- முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
- ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
தஞ்சாவூர்:
உலக விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் தஞ்சையில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர். சரவணவேல் மற்றும் குழுவினர்கள் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Next Story






