search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை செயலி மூலம் பணிகள் துரிதம்:நெல்லை மாநகராட்சிக்கு ஸ்கோச்  விருது- 28-ந்தேதி கமிஷனர் டெல்லியில் பெறுகிறார்
    X

    'தூய்மை' செயலி மூலம் பணிகள் துரிதம்:நெல்லை மாநகராட்சிக்கு 'ஸ்கோச்' விருது- 28-ந்தேதி கமிஷனர் டெல்லியில் பெறுகிறார்

    • நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.
    • மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை உரமாக மாற்றப்படும்.

    நெல்லை:

    நாட்டில் அரசு துறைகளில் புதுமையான திட்டங்களை, வெற்றிகரமாக செயல்படுத்தும் நிறுவனங்களை பாராட்டி, 'ஸ்கோச்' அமைப்பு விருது வழங்குகிறது.

    அந்த வகையில், நெல்லை மாநகராட்சி தனது தூய்மை மொபைல் செயலி மற்றும் வெப் அப்ளிகேஷன் மூலம் நகர்ப்புற குடிமை அமைப்பில் சிறந்த திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஏற்படுத்தியதற்காக ஸ்கோச் அமைப்பினர் 'தங்க வகை' விருதை பெற்றுள்ளது.

    இந்த விருதை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி டெல்லியில் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெறுகிறார். நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் ராமையன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    ஆனால் பணியாளர்கள் பற்றாக்குறை, குறித்த நேரத்தில் வார்டுகளுக்கு சென்று குப்பைகள் சேகரிப்பதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் மாநகராட்சி சார்பில் 'தூய்மை' என்ற பெயரில் மொபைல் செயலி மற்றும் வெப் அப்ளி கேஷன் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தூய்மை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் வருகை, பணி முன்னேற்றத்தை கண்காணிப்பதில் தீர்வு ஏற்பட்டது.

    மேலும் தூய்மை பணியா ளர்களின் வருகைப்பதிவு, நெல்லை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை உரமாக மாற்றப்படும் மைக்ரோ கம்போஸ்ட் சென்டர்கள் புதுப்பித்தல், பணி முன்னேற்றம், முதன்மை சேகரிப்பு புதுப்பித்தல் போன்ற திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் தனிப்பயனாக்கப்பட்டு இந்த ஆப்-பில் சேர்க்கப்பட்டன. அவையும் பின்னர் அதிகாரிகளால் கண்காணிக்கும் வகைக்கு கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் இந்த மொபைல் ஆப் பயன்பாட்டுக்கு வருவதில் மிகுந்த சிரமமாக இருந்த நிலையில் தற்போது சுகாதார அதிகாரிகள் புரிந்துகொண்டு செயல்படவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றப்பட்டது.

    இது வார்டு அளவிலான செயல்பாடுகள் மற்றும் அறிக்கையிடலை பயனுள்ள முறையில் வழங்கியது. மேலும் இதுபோன்ற ஆப்-கள் மூலம் இருப்பிட கண்காணிப்பு பதிவு செய்யப்பட்டதால் கூடுதலாக பல நன்மைகள் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக வேலை அல்லது ஒரு செயல்பாடு உண்மையில் செய்யப்பட்டு ள்ளது என்பதற்கான ஆதாரம் இருக்கும். வார்டு எல்லைகளை மேப்பிங் மூலமாக ஜியோ-பென்சிங் செய்வதன் மூலம் இந்த தீர்வு செயல்படுத்தப்படுகிறது.

    இந்த ஆப் மூலமாக அதிகாரிகள் மத்தியில் பொறுப்புணர்வு மற்றும் பணியில் கவனம் செலுத்தும் உணர்வு உருவாகி வருகிறது. இதன் மூலம் தூய்மை பணியாளர்களின் 100 சதவீதம் வருகையை பெற்று, குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக அளவு கழிவுகளை சேகரிக்க முடியும் என்பதால் தற்போது நெல்லை மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக திகழ்கிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×