என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் தொழிலாளிக்கு அடி-உதை
- குடிபோதையில் கனகராஜின் வீட்டின் முன்பு வெகு நேரமாக சத்தம் போட்டு கொண்டு இருந்தார்.
- கணவரின் சத்தத்தை கேட்டு கவிதா ஓடி வந்தார். அவர் மொய்தீனை தகராறில் ஈடுபடாமல் செல்லுமாறு கூறினார்
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ெதாழில்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). மில் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (38).
அதேபகுதியை சேர்ந்தவர் முகமது மொய்தீன் (47). கார் டிரைவர். இவர் அடிக்கடி குடிபோதையில் அந்த பகுதியில் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அதே போன்று குடிபோதையில் கனகராஜின் வீட்டின் முன்பு வெகு நேரமாக சத்தம் போட்டு கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த கனகராஜ் அவரிடம் சென்று வீட்டின் முன்பு சத்தம் போட வேண்டாம் இங்கு இருந்து சென்று விடு என்றார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரின் சத்தத்தை கேட்டு கவிதா ஓடி வந்தார். அவர் மொய்தீனை தகராறில் ஈடுபடாமல் செல்லுமாறு கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மொய்தீன் கணவன்-மனைவி 2 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் கனகராஜை தாக்கி விட்டு 2 பேரையும் மிரட்டி அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து கவிதா பொள்ளாச்சி கிழக்கு போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொய்தீனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






