என் மலர்
உள்ளூர் செய்திகள்

கதண்டு கடித்து தொழிலாளி சாவு
- கபிஸ்தலத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தனது உறவினர்களுடன் குலதெய்வ கோவிலான அய்யனார் கோவிலுக்கு வந்துள்ளார்.
- அங்கிருந்த கதண்டு கூட்டில் இருந்து பறந்து வந்து பாஸ்கரனை கொட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு கபிஸ்தலத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (55) என்பவர் தனது உறவினர்களுடன் குலதெய்வ கோயிலான அய்யனார் கோவிலுக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த கதண்டு, கூட்டில் இருந்து பறந்து வந்து பாஸ்கரனை கொட்டி உள்ளது. இதையடுத்து உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இது குறித்து வலங்கைமான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






