search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

    • தென்காசி மாவட்டத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது.
    • கலெக்டரின் துணைவியார் ஹேமலதா கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமையில் கலெக்டர் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டரின் துணைவியார் ஹேமலதா கலந்துகொண்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவியப்போட்டி, கோல போட்டி, சமையல் போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற பணியாளர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம் )ஷீலா,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, அலுவலக மேலாளர் ( பொது) .அரிகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பழனி நாடார் எம்.எல்.ஏ.

    வீரகேரளம் புதூர் வட்டம், ஆர். நவநீத கிருஷ்ணபுரம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமையில் பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

    அரசு மருத்துவமனை

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ , உதவி உறைவிட மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    மூத்த மருத்துவர் லதா , மருத்துவர் கீதா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பிச்சைவடிவு , பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் சுவர்ணலதா வரவேற்புரை ஆற்றினார்.இணை இயக்குனர் பணியாளர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார். மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மகளிரும் சேர்ந்து கேக் வெட்டி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.

    மருத்துவமனையில் பணி புரியும் பணியாளர்கள் மூலம் பெண்கள் பற்றிய விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் கவிதைகளை வாசித்தனர். ஆலடி அருணா செவிலியர் பயிற்சி மற்றும் மருந்தாளுனர் பயிற்சி பெண்கள் நடனம் ஆடி விழாவை மகிழ்வித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் இராஜாத்தி ஜெகதா நன்றியுரை வழங்கினார் , இந்நிகழ்ச்சியினை செவிலியர் உமா மஹேஸ்வரி தொகுத்து வழங்கினார்.

    கடையநல்லூர்

    கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பிரேமலதா தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர் அரசு தலைமை மருத்துவர் அனிதா பாலின் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தனுஷ் குமார் எம்.பி. , கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர், அப்பொழுது கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தை வழங்கினார். மாவட்ட சித்தர் மருத்துவ அலுவலர் உஷா,மருத்துவர்கள் மீனாட்சி, ராஜ்குமார், ஹரிஹரசுதன், மேனகா, சித்த மருத்துவமனை மருத்துவர் காஜா மொய்தீன், முகைனுத்தீன் சாருக் திமுக நகர செயலாளர் அப்பாஸ் நகர மன்ற உறுப்பினர் திவான் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் டாக்டர் கார்த்திக் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.

    தென்காசி யூனியன் அலுவலகம்

    உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தைமணி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மு.கனகராஜ் முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் அன்பரசு வரவேற்று பேசினார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செ.குழந்தைமணி கேக் வெட்டினார். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.

    மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.அன்பரசு, ரா.ராதிகா, இந்திரா, ராதாதிருமலை, அன்னத்தாய் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் முருகையா, வினிபா, ராஜ செல்வி, சங்கீதா, பாலமுருகன், பாலசுப்பிரமணியன் மற்றும் கணினி இயக்குனர்கள் கிருஷ்ணராஜா, தினகரன், சிவசுப்பிரமணியன், மரகதம், நந்தினி, இந்துமதி, கவுசல்யா, கனகலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர் ராதிகா நன்றி கூறினார்.

    Next Story
    ×