search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

    காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    • தண்ணீர் எடுக்க அடுத்த தெருவிற்கு செல்ல வேண்டிய அவலநிலை.
    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சாலையில் பள்ளம் தோண்டி இணைக்க வேண்டிய நிலை.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சி, செல்வவிநாயகபுரத்தில் குடிநீர் வசதி போதிய அளவு இல்லாததால் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமணி பேராவூரணி போலீசுக்கு தகவல் அளித்தார்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி கூறியதாவது:-

    குடிநீர் பைப் லைன் மட்டுமே உள்ளது. தண்ணீர் வரவில்லை.

    தண்ணீர் எடுக்க அடுத்த தெருவிற்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

    போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

    இதுகுறித்து மாவடுகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் பழனிவேல் கூறியதாவது, செல்வவிநாயகபுரத்தில் சில பகுதிகளில் கூடுதல் குடிநீர் வசதிக்காக பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

    குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சாலையில் பள்ளம் தோண்டி இணைக்க வேண்டியுள்ளதால் நெடுஞ்சாலை துறை அனுமதி பெற்று விரைவில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.

    Next Story
    ×