search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணத்தில்  பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: கணவர் கண் எதிரே துணிகரம்
    X

    மரக்காணத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: கணவர் கண் எதிரே துணிகரம்

    • கிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் வீடு திரும்பி உள்ளனர் .
    • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிஷாவின் தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டிஉள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் மீனவர் கிராம பகுதியை சேர்ந்தவர் தியாகு வயது (35) இவரது மனைவி நிஷா வயது (30 )இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்று அங்கு தனது வேலைகளை முடித்துக் கொண்டுகிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் வீடு திரும்பி உள்ளனர் . இவர்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தின் அருகில் வந்த போது இவர்களின் வாகனத்தை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் ைசக்கிளில் அமர்ந்து வந்த நிஷாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிஷா தனது தாலி செயினை பிடிக்க முயற்சி செய்து உள்ளார் .அப்போது மர்ம நபர்கள் நிஷாவை தள்ளி உள்ளனர். இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிஷாவின் தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டிஉள்ளது. அந்த நேரத்தில் தாலி செயினை பறித்த மர்ம நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். தன் கண் எதிரிலேயே இச்சம்பவத்தை கண்ட தியாகு ஒன்றும் செய்ய முடியாமல் கதறியபடி தன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிஷா அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து தியாகு மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் மரக்காணம்அருகே கோட்டக்குப்பத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தனியார் ஊழியரிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுபோல் தொடர்ந்து இப்பகுதியில் வழிப்பறி கொள்ளை நடைபெற்று வருவதால் எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×