என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே  மின்சாரம் தாக்கி பெண் சாவு - மாடு மேய்க்க சென்றபோது பரிதாபம்
    X

    நெல்லை அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு - மாடு மேய்க்க சென்றபோது பரிதாபம்

    • இசக்கியம்மாளுக்கு திருமணம் ஆகாததால் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.
    • மாட்டை விரட்ட இசக்கியம்மாள் சென்றபோது மின் கம்பத்தில் உள்ள ஸ்டே கம்பியை பிடித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சுடலை மாடன்.

    மின்சாரம் தாக்கியது

    இவரது மகள் இசக்கியம்மாள் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகாததால் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள காட்டுப் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றிருந்தார். அப்போது மாடு ஒன்று மின்மாற்றி அருகே ஓடிச் சென்றுள்ளது. அதனை விரட்டுவதற்காக இசக்கியம்மாள் சென்றபோது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் உள்ள ஸ்டே கம்பியை பிடித்துள்ளார். இதனால் அது மின் வயரில் உரசியதில் இசக்கியம்மாள் மீது மின்சாரம் தாக்கியது.

    பரிதாப சாவு

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார். இதை பார்த்தவர்கள் உடனடி யாக சீதபற்பநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இசக்கியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×