என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் முடிவடையுமா?
    X

    பணிகள் தொடங்கிய நிலையிலேயே காணப்படும் நீர்த்தேக்க தொட்டி.

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் முடிவடையுமா?

    • பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்த கொத்தங்குடி ஊராட்சி சாத்தனூர் கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது.

    பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.

    இதன் அருகில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது.

    மாணவர்கள் ஓய்வு நேரங்களில் அவ்வழியாக செல்வதும், விளையாடுவதும் ஆக உள்ளனர்.

    எனவே, பள்ளியும் அருகில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×