search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • முள்ளெலிகள், பச்சோந்திகள், எறும்பு தின்னிகள், கழுகுகள் பாதுகாப்பு பற்றி அபினேஷ் முத்தையன் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார்.
    • இந்த நிகழ்ச்சியில் விலங்கியல்துறை இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் துறையின் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முள்ளெலிகள், பச்சோந்திகள், எறும்பு தின்னிகள், கழுகுகள் பாதுகாப்பு பற்றி தானேஜா விண்வெளி மற்றும் விமான நிறுவன நிதியுதவியுடன் பிரவீன்குமார் தலைமையில் ஆராய்ச்சி மாணவரான அபினேஷ் முத்தையன் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். முன்னதாக விலங்கியல் துறை தலைவர் வசுமதி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை ஆரோக்கியமேரி பெர்னாதீஸ் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் வேதியியல் துறை தலைவர் கவிதா, பேராசிரியர்கள் செந்தில்குமார், லோக்கிருபாகர், கெழஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விலங்கியல்துறை இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனையின்பேரில் பேராசிரியர்கள் லிங்கதுரை, மணிகண்டராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×