search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது எடுத்த படம். 

    தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
    • இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 439 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இக்கூட்டத்தில், இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஈம சடங்கிற்கான செலவு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 16 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.17ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்திற்கான காசோலைகளும், ஒரு பயனாளிக்கு ரூ.8,500 மதிப்பிலான காது ஒலி கருவியும், இரண்டு பயனாளிகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான பாதுகாவலர் நியமன சான்று என மொத்தம் 19 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் ரூ.2லட்சத்து 80,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

    கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 439 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து மனு தாரர்களுக்கு உரிய பதிலை விரைவாக அளிக்கு மாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மா வதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி கமிஷனர் (கலால்) நடராஜன் (பொறுப்பு), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×