என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
    X

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

    • தமிழகத்தை காக்க விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் நடக்கும்.
    • தி.மு.க.அமைச்சர்கள் ரூ.50 ஆயிரம் கோடி கொள்ளையடித்து உள்ளனர். தற்போது நடப்பது நாடக ஆட்சி.

    கோவை

    அண்ணா பிறந்தநாளை யொட்டி கோவை தொண்டா முத்தூர் சட்டமன்ற தொகுதி, குனியமுத்தூர் பகுதி அ.தி.மு.க. சார்பில் குனியமுத்தூரில் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதற்கு முன்னாள் அமைச்சரும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    அண்ணாவின் புகழை பற்றி பேசுவதற்கு

    அ.தி.மு.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது. அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டரும் முதல்-அமைச்சர் ஆகலாம். 1967-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சிக்கு வர எம்.ஜி.ஆர். தான் காரணம்.

    2016-ம் ஆண்டில் ஜெயலலிதா இறந்தவுடன் குறுக்குவழியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைத்தார். ஆனால் அதற்கு நான் முட்டுக்கட்டையாக இருந்ததால் எனது வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள்.

    தி.மு.க.அமைச்சர்கள் ரூ.50 ஆயிரம் கோடி கொள்ளையடித்து உள்ளனர். தற்போது நடப்பது நாடக ஆட்சி. அதில் மு.க.ஸ்டாலின் நடிக்கிறார். கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். வெள்ளலூர் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது.

    கோவையில் தற்போது எங்கு பார்த்தாலும் சாலைகள் படுமோசமாக உள்ளன. எனவே சாலைகளை சீரமைக்காவிட்டால் மாநகராட்சி முன்பு போராட்டம் நடத்தப்படும். தி.மு.க.வின் பொய் பிரசாரம் மக்களிடம் செல்லுபடியாகாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். அதைத்தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றதேர்தலிலும் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா பேசியதாவது:- அமைச்சர் வீட்டில் ரெய்டு என்ற பெயரில் தி.மு.க. கபடி ஆடுகிறது. கோவை அ.தி.மு.க.வின் கோட்டை. இதில் யாரும் போட முடியாது ஓட்டை.

    போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது விடியல் அரசு இல்லை. விளம்பர அரசு. இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியதை தி.மு.க. அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எம்.ஜி.ஆருக்கும், அண்ணாவுக்கும் இடையே சகோதரத்துவ நட்பு இருந்தது.

    எம்.ஜி.ஆர்., அண்ணாவின் கொள்கை களை பின்பற்றினார். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மதிக்க ப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக வருவார்.

    தமிழகத்தை காக்க விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் நடக்கும்.

    தற்போது தேர்தல் வைத்தால் கூட அ.தி.மு.க. நிச்சயம் வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×