search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வாவல் மீன் ரூ.1,400க்கு விற்பனை
    X

    கோவையில் வாவல் மீன் ரூ.1,400க்கு விற்பனை

    • கேரளா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது
    • மீன்களின் விலை குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை

    கோவை மீன் மார்க்கெட்டிற்கு கடல் மீன்கள் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் தற்போது மீன் பிடிக்க தடைக்காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டி–னம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து மட்டுமே தற்போது மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    மேலும் தமிழகத்திலிருந்து மீன்கள் கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் மீன்களின் விலை குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    பெரிய வஞ்சரம் ரூ.1100க்கும், சின்ன வஞ்சரம் ரூ.900க்கும், விளமீன் ரூ.500க்கும் பாறை ரூ.550க்கும், சங்கரா ரூ.400க்கும், நெத்திலி ரூ.350க்கும், மத்தி ரூ.250க்கும்,கருப்பு வாவல் ரூ.1000க்கும், வெள்ளை வாவல் ரூ.1400க்கும், ராமேஸ்வரம் நண்டு ரூ.700க்கும், சாதா நண்டு ரூ.400க்கும், கிளிமின் ரூ.400க்கும் சாலமன்ரூ. 1100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மீன்கள் விலை உயர்வால் பொதுமக்கள் குறைந்த அளவிலான மீன்களை வாங்கி செல்கின்றனர். இது குறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் தடைக்காலம் என்பதால் தமிழகத்தில் பிடிக்கக்கூடிய மீன்களை கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் கோவை மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைவாக உள்ளது. கேரளாவில் தடைக்காலம் முடிந்த பின்னர் மீன்கள்விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

    Next Story
    ×