என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாகுபடிக்காக 140 நாட்களுக்கு ராமநதி, கடனா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
- பிசான சாகுபடி செய்வதற்கு இன்று முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 140 நாட்களுக்கு வினாடிக்கு 60 கனஅடி அளவு தண்ணீர் திறக்கப்படும்.
- தென்காசி மாவட்டம் மற்றும் வட்டத்தில் 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் மேலக்கடையம் கிராமத்தில் உள்ள ராமநதி அணையில் இருந்து பிசான சாகுபடி செய்வதற்கு இன்று முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 140 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கனஅடி அளவுக்கு 823.92 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.
இதன் மூலம் தென்காசி மாவட்டம் மற்றும் வட்டத்தில் 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கடையம் அருகே சிவசைலம் கிராமத்தில் உள்ள கடனா அணையில் இருந்து பாசனம் பெறும் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து 140 நாட்களுக்கு வினாடிக்கு 125 கனஅடிக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 1653.87 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் இன்று முதல் திறக்கப்பட்டது.
இதன் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் சேரன்மகாதேவி வட்டங்களில் 9923.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






