என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 2 கோடி பேரின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு
- ஆதார் எண்ணை இணைக்கும் பணி தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது.
- சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
சென்னை :
வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்களில் இதுவரை 2 கோடி பேர் அதாவது 32 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.
மாவட்டந்தோறும் கலெக்டர்கள், ஆதார் சிறப்பு இணைப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதுதவிர, சில மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆதார் எண் இணைக்கும் நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
Next Story






