search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரும்பூர் அருகே கைப்பந்து போட்டி- கூடுதாழை அணிக்கு முதல் பரிசு
    X

    வெற்றிபெற்ற கூடுதாழை அணிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.


    குரும்பூர் அருகே கைப்பந்து போட்டி- கூடுதாழை அணிக்கு முதல் பரிசு

    • குரும்பூரை அடுத்த வெள்ளகோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    குரும்பூர்:

    குரும்பூரை அடுத்த வெள்ளகோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

    இதில் தென் மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். அணிகளை ஒவ்வொரு குழுக்களாக பிரித்து புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்ற அணிகள் கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

    இதில் கூடுதாழை ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் முதலாம் பரிசையும், கானம் கஸ்பா அணியினர் 2-ம் பரிசையும், ராமநாடு அணியினர் 3-ம் பரிசையும், வெள்ளகோவில் இளைஞர் அணியினர் 4-ம் பரிசையும் தட்டி சென்றனர்.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு சுகந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    ஆழ்வை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி மற்றும் முன்னாள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருவேல்ராஜ், ராஜேஷ், அருண் சங்கர் உட்பட வெள்ளக்கோவில் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×