என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி
தொழிலாளர் தினத்தையொட்டி மாநகராட்சி சார்பில் தொழிற்பயிற்சி வகுப்புகள்- கமிஷனர் நாளை தொடங்கி வைக்கிறார்
- பாளை மேடை போலீஸ் நிலையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் தொழிற்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
- பயிற்சி வகுப்பிற்கு செய்முறைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
நெல்லை:
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் தொழிற்பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது.
பாளை மேடை போலீஸ் நிலையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள இந்த வகுப்பை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி நாளை காலை தொடங்கி வைக்கிறார்.
இந்த பயிற்சி வகுப்பில் சாயம் போடுதல் மற்றும் அச்சு பதித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பிற்கு செய்முறைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். பொருட்களுக்கான கட்டணமாக ரூ. 20 வசூலிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பை மத்திய அரசு நெசவுத் துறை ஆய்வு துறையில் அதிகாரியாக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி நடத்துகிறார். மண்பாண்டம் பொருட்கள் செய்வது குறித்து பாலசுப்பிரமணியன் பயிற்சி அளிக்கிறார்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






