என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிமாத பிறப்பையொட்டி பாளை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம்
    X

    பாளை ராஜகோபால சுவாமி கோவிலில் கோபூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஆடிமாத பிறப்பையொட்டி பாளை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம்

    • பசு மற்றும் கன்றுக்கு புதிய வஸ்தி ரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • மகா தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    தேவர்களின் இரவு பொழுதாக கருதப்படும் தட்சணாயன புண்ணிய காலம் இன்று தொடங்குகிறது. இதேபோல ஆடிமாத பிறப்பும் இன்று தொடங்கும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான பாளையில் அமைந்திருக்கும் அழகிய மன்னார் ராஜ கோபால சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி கோ பூஜை மற்றும் சிறப்பு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

    இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு ராஜ கோபால சுவாமி விஸ்வரூப தரிசன மும், அதனை தொடர்ந்து கருடன் சன்னதி முன்பு கோபூஜையும் நடைபெற்றது. பசு மற்றும் கன்றுக்கு புதிய வஸ்தி ரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொ டர்ந்து லட்சுமி அஷ்டோத்திர சிறப்பு பூஜை களும், குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட பக்தர்களும் பசுவிற்கு அகத்திக்கீரை- பழ வகைகளை வழங்கி வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×