search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம்
    X

    சப்-இன்ஸ்பெக்டர் வீரணன் ஏட்டு சிலம்பரசன்

    சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம்

    • சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அ.முக்குளம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் ஆயுதப்படை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டனர்.

    இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாரின் இத்தகைய பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அ.முக்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல வருடங்க ளாக கஞ்சா விற்பனை, திருட்டு, மதுபாட்டில்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வந்தது.

    சில மாதங்களுக்கு முன்பு அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி வந்த சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் சக போலீசாருடன் இணைந்து கஞ்சா விற்பனை, சட்ட விரோத மதுபான விற்பனை, கொலை, கொள்ளை, மணல் திருட்டு போன்ற குற்ற சம்பவங்க ளுக்கு எதிராக நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அதன் காரணமாக அந்த பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவு குறைந்திருந்தன. மேலும் அ.முக்குளம் பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கும் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்த நிலையில் பணிக்கு வந்த சில வாரங்களிலேயே வாகன தணிக்கையின் போது நரிக்குடி சரகத்தில் ஒரே நேரத்தில் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அதில் சம்பந்தப்பட்ட 8 குற்றவாளி களை அதிரடியாக கைது செய்தனர்.

    அது மட்டுமின்றி நரிக்குடி மற்றும் அ.முக்குளம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள், ஆடு திருட்டு என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்க ளையும் கைது செய்வதற்கு உதவியாக இருந்தனர்.

    இவ்வாறு பணியில் சேர்ந்தது முதல் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதோடு அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கிராமங்க ளுக்கு நேரில் சென்று மாணவர்களின் எதிர்கா லத்தை சீரழிக்கும் கஞ்சாவை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் குற்றச்செயல்கள் குறைந்து வந்ததுடன் காவல் நிலையம் செல்லும் பொது மக்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்ட றிந்து அது தொடர்பாக புகார் கொடுக்கப்படும் நபர்கள் மீது பாரபட்சமின்றி முறையான விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இவர்களை போன்ற நேர்மை யாகவும், பொது மக்களுக்கு பாதுகாவ லனாகவும் இருக்கும் போலீசாரை திடீரென்று இடமாற்றம் செய்யப் பட்டதால் அ.முக்குளம் பகுதியில் மீண்டும் கஞ்சா விற்பனை, கொள்ளை, திருட்டு போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. அதன் காரணமாக மீண்டும் சீர்கேடான பகுதியாக அ.முக்குளம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

    எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் அ.முக்குளம் காவல் நிலையத்தில் நேர்மையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மற்றும் ஏட்டுவின் பணியிட மாற்றத்தை பரிசீலனை செய்து மீண்டும் அ.முக்குளம் காவல் நிலையத்திலேயே பணி அமர்த்த வேண்டும்.

    இதன் மூலம் அ.முக்குளம் காவல் நிலைய எல்லைப்ப குதிகளில் உள்ள கிராமங்களை மீண்டும் அமைதி பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×