search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்

    • மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களளை கலெக்டர் வழங்கினார்.
    • அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநா தரெட்டி தலைமை தாங்கினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கும்,

    அவர்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    இதில், வேலைவாய்ப்பு, சுயதொழில் கடனுதவி, வீட்டுமனை பட்டா, வீடு, உதவித்தொகை, இருசக்கர வாகனம், 3 சக்கர வண்டி, குடும்ப அட்டை, திறன் பயிற்சி, அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உபகரணங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 500 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களுக்கு தீர்வுகாணுமாறு, கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மனு அளித்த கால்களை இழந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்ச ர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களையும், ஊன்றுகோல் வேண்டி மனு அளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு நவீன ஊன்றுகோல் மற்றும் மூக்கு கண்ணாடியையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இதில் திட்ட இயக்குநர்கள் திலகவதி, தெய்வேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) ஜெயராணி, வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்நாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஷாலினி மற்றும் பல ர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×