என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
    X

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது.
    • 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள், விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி , தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 28-ந் தேதி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    இந்த முகாமைகலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்காது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×