என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ராம்கோ நிறுவனங்களின் பொங்கல் விளையாட்டு விழா
  X

  சிறப்பாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

  ராம்கோ நிறுவனங்களின் பொங்கல் விளையாட்டு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது
  • அனைத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.

  ராஜபாளையம்,

  ராம்கோ குரூப் பஞ்சாலை பிரிவை சேர்ந்த ராஜபாளையம் மில்ஸ், ஸ்பின்டெக்ஸ்ட், ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸ் (பெரு மாள்பட்டி), ராஜபாளையம் மில்ஸ் -பேப்ரிக் டிவிசன், ஸ்ரீவிஷ்ணு சங்கர் மில், ஸ்ரீராம்கோ ஸ்பின்னர்ஸ், சந்தியா ஸ்பின்னிங் மில், ராஜபாளையம் டெக்ஸ்டைல் (சுப்பிர மணியபுரம்) ஆகிய நிறுவனங்களுக்கான பொங்கல் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் மனமகிழ் மன்றத்தின் விளையாட்டு மைதானத்தில் நடந்தன.

  ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் பி.வி.நிர்மலா ராஜூ, இயக்குநர்கள் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா, என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் நிறு வனங்களின் இயக்குநர்கள் மற்றும் ராம்கோ குரூப் நூற்பாலைகளின் தலைவர் என்.மோகனரங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  விழாவில் 15 வருடம் முதல் 40 வருடம் வரை சர்வீஸ் பூர்த்தி செய்த தொழிலாளர்கள் மற்றும் அதிக வருடம் ஊதிய இழப்பின்றி பணியாற்றிய 1226 தொழிலாளர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 41.93 லட்சம் வழங்கப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 2176 தொழிலாளர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

  ராம்கோ குரூப் நூற்பாலைகளின் துணை தலைவர் (மனிதவளம்) என்.நாகராஜன் வரவேற்றார். தொழிற்சங்கத் தலைவர்கள் என்.கண்ணன் (எச்.எம்.எஸ்.), ஆர்.கண்ணன் (ஐ.என்.டியூ.சி.), பி.கே.விஜயன் (ஏ.ஐ.டி.யூ.சி.), எஸ்.கிருஷ்ணசாமி (எஸ்.வி.எஸ்.எம். மில் யூனியன்) ஆகியோர் பேசினர்.

  உற்பத்தித் திறன் அதிகரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, செலவினங்களை கட்டப்படுத்துதல் ஆகி யவற்றின் அடிப்படையில் எக்செல் அவார்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

  இதில் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பேசுகையில், நூற்பாலைகள் தற்போது மோசமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது. இருந்தாலும் ராம்கோ நிறுவனத்திற்கு என்று மதிப்பு உள்ளது. கடந்த முறை ஐரோப்பா நாடுகளான இத்தாலி, ஜெர்மன் நாட்டிற்கு சென்று வாடிக்கையாளர்களை சந்தித்தபோது, நல்ல தரம், குறித்த காலத்தில் டெலிவரி மற்றும் தொடர்ச்சியான சேவைகளை நாம் செய்து வருவதால்தான் நம்மிடம் வணிகம் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்கள் என்றார்.

  விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜபாளை யம் மில்ஸ் துணை தலைவர் (மனிதவளம்) நாகராஜன் மற்றும் அனைத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.

  Next Story
  ×