search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழ.நெடுமாறன் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது
    X

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் மாணிக்கம்தாகூர் எம்.பி. குறைகளை கேட்டறிந்தார்.

    பழ.நெடுமாறன் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது

    • பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
    • எங்கள் கூட்டணியின் நோக்கமே தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.

    சிவகாசி

    விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் சிவகாசி அருகே நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல் ெரயில் நிலையங்களை சேர்க்கவில்லை. சென்னை- கொல்லம் ெரயில் சிவகா சியில் நிற்பதில்லை. தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

    ராகுல்காந்தி பிரதமர் ஆனால் சிவகாசி முன்னேற்றம் அடையும். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

    சிவகாசிக்கு பல சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தயாராக இருந்தாலும், மத்திய அரசு நிதி அளித்தால் மட்டுமே சாத்தியமாகும். மாநகராட்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும்படியும் இது குறித்து மத்திய மந்திரிக்கு ரூ.250 கோடி நிதி கேட்டு மனு அளித்து 3 மாதங்களாகியும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    நிலம் எடுப்புப் பணி முடிந்தும் சிவகாசி ெரயில்வே மேம்பால பணிகள் தொடங்கும். 2019 தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்தவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். எங்கள் கூட்டணியின் நோக்கமே தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறி மக்களை குழப்பி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.துலுக்கப்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் கலையரங்க கட்டிடப் பணிகளைஆய்வு செய்தார்.

    ஊராம்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எம்.பி. நிதியில் அமைக்கப் பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் மாணிக்கம்தாகூர் எம்.பி கேட்டறிந்தார்.

    விளாம்பட்டி ஊராட்சி காமராஜர்புரம் காலனியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்த எம்.பி. பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ், வக்கீல் குப்பையாண்டி, வட்டார தலைவர் தர்மராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×