search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
    X

    விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 23 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

    • விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடக்கிறது.
    • இன்று முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை நடக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

    சிறப்பு மருத்துவர்கள் குழு முகாமிற்கு வருகை தந்து மாணவர்களின் இயலாத் தன்மைக்கேற்ப மருத்துவச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், UDID அட்டை பதிவேற்றம் செய்தல் உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரைத்தல், அறுவைச் சிகிச்சை பரிந்துரை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தல் போன்ற செயல்பாடுகள் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த முகாம் இன்று (24-ந் தேதி) விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், 27-ந் தேதி காரியாபட்டி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 31-ந் தேதி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பிப்ரவரி 2-ந் தேதி திருச்சுழி ஒன்றியம் எம்.ரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

    7-ந் தேதி அருப்புக் கோட்டை சி.எஸ்.ஐ (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியிலும், 9-ந் தேதி சிவகாசி எ.வி.டி. நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், 14-ந்தேதி ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், 16-ந் தேதி சாத்தூர் எட்வர்டு நடுநிலைப் பள்ளியிலும், 21-ந் தேதி வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ந் தேதி வத்ராயிருப்பு ஒன்றியம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 28-ந் தேதி ஸ்ரீவில்லி புத்தூர் ஒன்றியம் ஊரணிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது.

    முகாமிற்கு வரும்பொழுது மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம்-8, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல்-2, ஆதார் கார்டு அசல் மற்றும் நகல் - 2, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். மேலும் ஏற்கனவே தேசிய அடையாள அட்டை வைத்திருப்போர் அசல் மற்றும் அனைத்துப் பக்கங்களின் நகல்கள் கொண்டு வர வேண்டும்.

    இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து மாற்றுத்திறளாளி மாணவர்களும், பெற்றோர்களும் பயனடையலாம் என்று விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×