என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய மகளிர் சுகாதார வளாகம் திறப்பு
- புதிய மகளிர் சுகாதார வளாகம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என தங்க பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து மகளிர் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தங்க பாண்டியன்எம்.எல்.ஏ. மகளிர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அப்போது அவர் அங்கிருந்த பெண்களிடம் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைத்து விட்டதா? என கேட்டார். அவர்கள் கிடைத்து விட்டது என கூறினர்.
இந்த சுகாதார வளா கத்தில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியை பார்வையிட்ட எம்.எல்.ஏ., அதுபோல் ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள் ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் வசந்தகுமார், ராம மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள், துணை தலைவர் காந்தி, கிளைச்செயலாளர்கள் ஆரோக்கியராஜ் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.