என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்; 14 பேர் மீது வழக்கு
- பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- அவர்களிடமிருந்து ரூ. 24,990 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோயிலில் தனியார் கிளப் உள்ளது. இதனை முத்தையா என்பவர் மேற்பார்வை செய்து வருகிறார். நேற்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் உத்தரவின் பேரில் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் கிருஷ்ணன் கோயில் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கிளப்பில் 13 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 24,990 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கிளப் மேற்பார்யாளர் முத்தையா மற்றும் சீட்டு விளையாடிய 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






