search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்- விருதுநகர் மாவட்ட நிர்வாகம்
    X

    விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்- விருதுநகர் மாவட்ட நிர்வாகம்

    • விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகள் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்ப தாவது:-

    பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2023-24) முதல் இப்கோ டோக்யோ ஜெனரல் இன்சூ ரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    ரபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ காப்பீடு செய்து கொள்ளலாம்.

    வேளாண் பயிர்களை பொருத்த வரை ஏக்கருக்கு சம்பா-நெல் பயிருக்கு ரூ.394, மக்காச்சோளம் பயிருக்கு ரூ.317, சோளம் பயிருக்கு ரூ.135, கம்பு பயிருக்கு ரூ.160, பாசிப் பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.210, பருத்தி ரூ.508, நிலக் கடலை ரூ.312, எள் ரூ.120, எனவும் மற்றும் சூரியகாந்தி ரூ.187 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தோட்ட பயிர்களை பொருத்த வரை ஏக்கருக்கு கொத்தமல்லி ரூ.575, மிளகாய் ரூ.1018, வெங்காயம் ரூ.1765, வாழை ரூ.3445 எனவும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

    ரபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகை களுக்கு நவ. 15-ந்தேதி, மக்காச்சோளம், கம்பு, துவரை, பருத்தி பயிர்க ளுக்கு நவ. 30-ந் தேதி, சம்பா-நெல், சோள பயிர்களுக்கு டிச. 15-ந் தேதி, நிலக்கடலை, சூரியகாந்தி பயிர்களுக்கு டிச.30, எள் பயிருக்கு ஜன.31 வரையிலும் ஆகும்.

    கொத்தமல்லி ஜன.18, மிளகாய், வெங்காயத்திற்கு ஜன.31, வாழை பயிர்களுக்கு பிப்.29 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×