என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய அ.தி.மு.க.வுக்கு தைரியம் இல்லை
    X

    100 நாள் வேலை திட்டத்தில் பெண்களிடம் குறைகளை கேட்ட மாணிக்கம் தாகூர் எம்.பி.

    மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய அ.தி.மு.க.வுக்கு தைரியம் இல்லை

    • மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய அ.தி.மு.க.வுக்கு தைரியம் இல்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள கிராமங்களில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. நேரில் ஆய்வு செய்தார். அப்போது வேலை பார்க்கும் பெண்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு பணிகளை டெண்டர் முறையில் கொடுப்பது ஆபத்தான வேலையாக முடியும். மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்துவதை கைவிட்டு நிரந்தரமாக பணியா ளர்களை வேலைக்கு எடுக்க வேண்டும்.

    சீமான் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். அவரை தமிழக மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். கர்நாடகாவில் மொழி வெறியர்களை தூண்டி விட்டு பா.ஜ.க. தமிழகத்திற்கு எதிராக பிரச்சினை செய்து வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது. மோடி பிரதமராக வரக்கூடாது என்று பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கும் சொல்ல தைரியம் இல்லை.கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. வேசம் போடுகிறது.

    நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெங்கசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், ஓபிசி பிரிவு சுப்புராம், வட்டாரத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×