search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.6 கோடி மதிப்பீட்டில் நவீன திருமண மண்டபம்
    X

    திருமண மண்டபம் கட்டப்பட உள்ள இடத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ரூ.6 கோடி மதிப்பீட்டில் நவீன திருமண மண்டபம்

    • ரூ.6 கோடி மதிப்பீட்டில் நவீன திருமண மண்டபத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • ரூ.6 கோடி மதிப்பீட்டில் விரைவில் திருமண்டபம் அமைக்க வரைபடம் மற்றும் மதிப்பீடு தயார் செய்யப்படும் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோவில் நிலத்தில் குளிர்சாதன வசதியுடன் நவீன திருமண்டபம் அமைக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு அமைச்சர் மதுரை அறநிலையத்துறை இணை ஆணையரிடம் கூறி திருமண்டபம் அமைப்பது குறித்து கோப்பு தயார் செய்ய கூறியிருந்தார், அதனைத் தொடர்ந்து மாயூரநாதர் சுவாமி கோவில் அருகில் உள்ள கோவில் நிலத்தில் ஏழை, எளிய மக்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்தும் நோக்கத்தில் திருமண மண்டபம் அமைய உள்ள இடத்தை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    அப்போது எம்.எல்.ஏ. பேசுகையில், ஏழை எளிய மக்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்த தனியார் திருமண்டபங்களுக்கு இணையாக குளிர்சாதன வசதியுடன் நவீன திருமண்டபம் அமைக்கப்படுகிறது.

    இது விருதுநகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்ட கலந்துரையாடல் அரங்கம் போன்று 1000 பேர் அமருவது போலும், 300 பேர் அமர்ந்து உணவருந்தும் கூடத்துடன் வரைபடம் அமைக்க வேண்டும் என்றார்.

    மேலும் இந்த திருமண்டபம் அமைக்க ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 கோடி வழங்குவதாகவும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

    இணை ஆணையர் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து ரூ.4 கோடியுடன் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் விரைவில் திருமண்டபம் அமைக்க வரைபடம் மற்றும் மதிப்பீடு தயார் செய்யப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் ராஜா, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா கவுன்சிலர் செந்தில்குமார், மனோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×