என் மலர்
உள்ளூர் செய்திகள்

37 பவுன் நகை- ரூ.4 லட்சம் மோசடி
- வாடிக்கையாளரிடம் 37 பவுன் நகை- ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.
- வியாபாரி உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). இவர் விருதுநகர் பஜார் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கடந்த 2 வருடமாக சென்று வந்தார்.
இதில் கடை உரிமையா ளர் மண்டலே உத்தம் ஜோதி ராம், அவரது மனைவி அஸ்வினி, மாமனார் யஷ்வந்த் ஆகியோர் பழக்கமாகினர்.
இந்த நிலையில் முத்துக்குமார் தனக்கு சொந்த மான நகைகளை அடகு கடையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரிடம் நகைக்கடை உரிமையாளர் மண்டலே உத்தம் ஜோதிராம் நகைகளை என்னிடம் கொடுங்கள், வட்டி வேண்டாம் என்று கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து முத்துக்குமார் கடந்த 2021ம் ஆண்டு 37 பவுன் நகைகளை மண்டலே உத்தம் ஜோதிராமிடம் கொடுத்துள்ளார். மேலும் நகையை மீட்பதற்கு ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட 3 பேரும் நகை-பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுபற்றி முத்துக்குமார் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மண்டலே உத்தம் ஜோதி ராம், அஸ்வினி, யஷ்வந்த் ஆகிேயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் இதேபோல் பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.