search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில்  ஊரக உள்ளாட்சி தேர்தல்  விறுவிறுப்பு
    X

    இடைத்தேர்தலில் இளம்பெண் வாக்களித்த காட்சி. 

    விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பு

    • விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிதேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
    • இன்று காலை 7மணிக்கு தேர்தல் தொடங்கியது. மாலை 6மணி வரை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவ ட்டத்தில் முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரணை ஊராட்சி வார்டு எண் 7-ல் உள்ள அம்பேத்கர் தெரு, பிள்ளையார் கோவில் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குத்தெரு ஆகிய பகுதிகள், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9-ல் உள்ள குளக்கரை தெரு, மெயின் ரோடு, மேட்டுத் தெரு, தச்சர் தெரு ஆகிய பகுதிகள், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் அன்னமங்கலம் ஊராட்சி வார்டு எண் 5-ல் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெரு, மடவிளாகம், மாரியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகள் அமைந்துள்ள கிராம ஊராட்சி வார்டுகளின் வார்டு உறுப்பினர்களுக்கான தற்செயல் தேர்தல் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 7மணிக்கு தேர்தல் தொடங்கியது. மாலை 6மணி வரை நடைபெறவுள்ளது.

    முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9-ல் 513 வாக்குகள் உள்ளது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    Next Story
    ×