search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை
    X

    விழுப்புரத்தில் பெய்த கன மழையால் விழுப்புரம் ரயில்வே ஜங்ஷனில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கும் காட்சியை படத்தில் காணலாம்.

    விழுப்புரம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை

    • விழுப்புரம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் வெளுத்து மழை வாங்கியது.
    • பொதுமக்கள் அனைவரும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு நிம்மதியாக தூங்கினார்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாகவும் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோல் நேற்று இரவு விழுப்புரம் மற்றும் விழுப்பு–ரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி, வானில் கருமயங்கள் சூழ்ந்து, இரவு திடீரென இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    தற்போது பெய்த மழையினால் வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த பொதுமக்கள் அனைவரும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு நிம்மதியாக தூங்கினார். பருவநிலை மாற்றத்தின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மழை மற்றும் வெயில் மாறி மாறி அடிக்க தொடங்குகிறது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழை விழுப்புரம் மற்றும் விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளான வளவனூர் விக்கிரவாண்டி கோலியனூர் கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்தது.

    Next Story
    ×