search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலோர கிராமங்களில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு - ஆலோசனை
    X

    விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன், கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனை இன்று காலை நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் மோகன் பொது மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க அறிவுறுத்தினார்.

    கடலோர கிராமங்களில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு - ஆலோசனை

    • விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • கடலோ ரத்தில் யாரும் வசிக்க வேண்டாம், முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருங்கள்.

    விழுப்புரம்:

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், சில இடங்களில் 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ளது.

    இங்கு மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்யவும், நிவாரணப் பணிகளை பார்வையிடவும் இன்று காலை விழுப்புரம் கலெக்டர் மோகன் கோட்டக்குப்பம் பகுதிக்கு அதிகாரிகளுடன் வந்தார். அங்கு பிள்ளைச்சாவடி குப்பத்தில் கடல் சீற்றத்தால் முழ்கும் நிலையில் உள்ள மீனவர் சங்க கட்டிடத்தை பார்வையிட்டார். அப்பகு தியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமினை பார்வையிட்டு, கடலோ ரத்தில் யாரும் வசிக்க வேண்டாம், முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருங்கள். அங்கு உணவு, குடிநீர், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது என்று பொது மக்களிடம் கூறினார்.

    இதைத் தொடர்ந்து மரக்காணம் தாசில்தார் அலுவலகத்திற்கு கலெக்டர் மோகன் சென்றார். புயலை எதிர்கொள்வது குறித்த அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மோகன் கலந்து கொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரைைய கடக்கும் என்பதால் கடற்கரையோர அனைத்து கிராம மக்களையும் முகாம்களில் தங்க வைக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப் பணித்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×