search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்காலை தூர்வார வேண்டி கூடுதல் கலெக்டரிடம் கிராமமக்கள் மனு
    X

    கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் குளிச்சப்பட்டு கிராமமக்கள் மனு அளித்தனர்.

    வாய்க்காலை தூர்வார வேண்டி கூடுதல் கலெக்டரிடம் கிராமமக்கள் மனு

    • சுமார் 60 அடி முதல் 78 அடி வரை வருவாய்த்துறை பதிவேட்டின் படி அகலம் கொண்டு செல்கிறது.
    • சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, நிலக்கடலை, தானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த குளிச்சப்பட்டு கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் வட்டம் சூரக்கோட்டை கிராம எல்லையில் ஓடும் வடிகால் குளிச்சப்பட்டு கிராம எல்லையில் உள்ள பொன்னேரியில் இருந்து வடியும் மழை நீரை தொடக்கமாகக் கொண்டு ரூ.18,00000 மதிப்பில் 5 கி.மீ. தூரம் ஜம்புகாபுரம் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் கடந்த 13-ந் தேதி நடைபெற்றது.

    இந்த வடிகால் வாய்க்கால் சுமார் 60 அடி முதல் 78 அடி வரை 16.9 மீட்டர் முதல் 24 மீட்டர் வரை வருவாய்த்துறை பதிவேட்டின் படி அகலம் கொண்டு செல்கிறது.

    இதில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பிலும், மேடு பகுதிகளாகவும் உள்ளது.

    இதற்கு முன் இரு கரைகளும் வண்டியில் செல்லும் அளவுக்கு பாதியாக இருந்து பயன்பாட்டில் இருந்தன.

    நாளடைவில் வயல் பகுதியாக ஆக்கிரமிப்பு உள்ளன.

    தற்போது இந்த வடிகாலை வருவாய்த்துறை பதிவேட்டின் படி தூர்வாராமல் மிகக் குறைந்த அளவில் இருக்கும் படியே தூர்வாரும் பணி நடைபெற்றது.

    அன்றைய தினமே குளிச்சப்பட்டு கிராம மக்கள் அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தோம்.

    அதன்படி அந்த அதிகாரிகள் சர்வே செய்த பிறகு தூர்வாரும் பணிகள் செய்கிறோம் என கூறிவிட்டனர்.

    ஜம்புகாபுரம் வடிகால் பகுதியான வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, நிலக்கடலை, தானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.

    இந்த பகுதிக்கு சாலை வசதி கிடையாது.

    இந்த வடிகாலை வருவாய்த்துறை பதிவேடு படி தூர்வாரி கரையை உயர்த்தினால் அறுவடை செய்யும் அறுவடை இயந்திரங்கள், உழவு டிராக்டர்கள், விவசாய இடு பொருட்கள் கொண்டு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே இந்த வடிகால் தூர்வாரும் பணிகளை பொன்னேரி பாயிண்டில் இருந்து குளிச்சப்பட்டு சாலை அல்லது வாளமர் கோட்டை சாலை பகுதி வரை தூர்வாரும்படியும், கரைகளை உயர்த்த ஆவணம் செய்யும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    Next Story
    ×