என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமான மண்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.
குண்டும் குழியுமான மண் சாலையை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை
- கள்ளிமேடு கிராம சாலைகள் கப்பி சாலையாகவும், மண் சாலையாகவும் உள்ளதால் கிராமக்கள் பல ஆண்டுகளாக அவதியுற்று வருகின்றனர்.
- மழைநீர் தேங்கி நின்று சேறும் சகதியுமாக உள்ளதால் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராராமுத்திரகோட்டை கீழத்தெரு, கீழ அம்பலகாரதெரு மற்றும் கள்ளிமேடு கிராம சாலைகள் கப்பி சாலையாகவும், மண் சாலையாகவும் உள்ளதால் கிராமவாசிகள் பல ஆண்டுகளாக அவதியுற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக மழை காலங்களில் தெரு சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக உள்ளதால் தெருவாசிகள் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story