என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு
ரெயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை - விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு
- ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம்.பி. விஜய் வசந்தைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
- ஊர்மக்கள் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் இன்று அங்கு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தின் மறுபுறம் அமைந்துள்ள ஊட்டுவாழ்மடம் மற்றும் கருப்புக் கோட்டை ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் நகர பகுதிக்கு வருவதற்கு ரயில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் மக்கள் பயணம் செய்ய மிக சிரமப்படுகின்றனர். இதனால் ஊர்மக்கள் எம்.பி. விஜய் வசந்தைச் சந்தித்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், இன்று அந்த ஊர்களில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், விரைவில் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மண்டல தலைவர் கண்ணன், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சூசை ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.






