search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ முகாம்
    X

    முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    கால்நடை மருத்துவ முகாம்

    • துணை சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பித்தல் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
    • மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்பட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், பெரு மாக்கநல்லூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர்

    கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெருமாக்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் இரா.கண்ணன் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும் அதற்கான சிகிச்சை குறித்தும் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினர்.

    இதில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து, சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். முகாமில் கால்நடை மருந்தகம், துணை சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பித்தல் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்

    எம்.எல்.ஏ.விடம் கொடுத்தனர்.

    முகாமில் பெருமாக்க நல்லூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளை முகாமில் கொண்டு வந்து சினை ஊசி, சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், ரமேஷ், கணேசன், ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ், கால்நடை உதவி மருத்துவர் ஏஞ்சலா சொர்ணமதி, மற்றும் ஊராட்சிமன்ற துணை தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் கால்நடை உதவி மருத்துவர் ரகுநாத் நன்றி கூறினார். முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×