search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை விழிப்புணர்வு சிகிச்சை முகாம்
    X

    பாமகவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    கால்நடை விழிப்புணர்வு சிகிச்சை முகாம்

    • நல்லூர் கால்நடை மருந்தகம் சார்பாக குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு களுக்கும், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம், நல்லூர் கால்நடை மருந்தகம் சார்பாக குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி, தலைமை வகித்து முகமை தொடங்கி வைத்தார். நல்லூர் கால்நடை மருந்தக மருத்துவர் டாக்டர் கவிதா தலைமையில், கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துசாமி, திருநாவுக்கரசு, கால்நடை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இந்த சிறப்பு கால்நடை முகாமில் பெரியம்மை நோய்க்காக தடுப்பூசி போடப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு களுக்கும், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    இதில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் , கன்றுகுட்டிகளுக்கு குடற்புழு நீக்கம், மாடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி, தாது உப்பு கலவை வழங்கப்பட்டன.

    முகாமில் குன்னமலை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி குணசேகரன் கலந்து கொண்டு சிறந்த கன்றுகளுக்கான பரிசுகளையும், சிறப்பாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்ட விவசாயி களுக்கு விருதுகளையும் வழங்கினார். முகாமிற்கு பாமகவுண்டம்பாளையம், பொதிகை பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து பயனடைந்தனர். முகாமில் ஊராட்சித் துணைத் தலைவர், வாழ் உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×