என் மலர்
வேலூர்
- பேரணாம்பட்டு ஒன்றியம் சார்பில் கொண்டாட்டம்.
- ஏராளமானோர் பங்கேற்பு.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கொண்டாடப்பட்டது.
பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்லலகுப்பம். குண்டல பல்லி. சாத்கர் கள்ளிப் பேட்டை அம்பேத்கர் நகர் சின்னதாமல் செருவு . கொத்தப்பள்ளி. பொகலூர். மேல்பட்டி போன்ற இடங்களில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இதில் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர்களான ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜி.பரசுராமன். ரமேஷ் எம்.வி.குப்பம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர். எஸ் ஒ முல்லா ஏரிகுத்தி சிட்டி பாபு. ஒன்றியக்குழு துணைத்தலைவர் டி.லலிதா டேவிட் சின்னதாமல் தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- முருகன் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார்
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரோலில் வெளியில் வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் இதே வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முருகனின் மருத்துவ சிகிச்சைக்காக 6 நாட்கள் அவசர விடுப்பாக கருதி பரோல் வழங்க வேண்டும் என நளினியும், அவரது தாயார் பத்மாவும் சிறைத்துறை நிர்வாகத்துக்கு மனு அளித்திருந்தனர்.
அந்த மனுக்களை பரிசீலனை செய்த சிறைத்துறை சூப்பிரண்டு அப்துல்ரகுமான், முருகன் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி, அவர் விடுப்புக்கு தகுதி பெறவில்லை என்று கூறி நளினியின் மனுவை நிராகரித்துள்ளார்.






