search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
    X

    மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

    • புதிய பஸ் நிலையம் முதல் பாகாயம் வரை எச்சரிக்கை பலகை
    • தடுப்பு சுவர்களை சீரமைக்க உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் பழுதடைந்த சாலைகளால் ஏற்படும் விபத்துகள், முக்கிய சாலைகளில் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிப்பது, சாலைகளின் பக்கவாட்டில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை சீரமைப்பது, உடைந்த நுழைவு வாயில் மூடிகளை மாற்றுவது, இடிந்த நிலையில் உள்ள சென்டர் மீடியன்கள் மற்றும் இரும்பு தடுப்பான்களை சீர்செய்வது, கழிவுநீர் வெளியேறுவதால் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    தேசிய நெடுஞ்சா லைகளில் உள்ள அகலம் குறைவான அணுகு சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.

    போக்குவரத்து பணிமனை அமைந்துள்ள ரங்காபுரம் பகுதியில் உள்ள அணுகுசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக அளவில் எதிர் திசையில் வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே அந்த இடத்தில் புதிய அணுகு சாலையை அமைக்க வேண்டும்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் முதல் சங்கரன்பாளையம் வழியாக பாகாயம் செல்லும் சாலையில் முக்கிய சந்திப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விபத்து நடைபெறும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஒளி எதிரொளிப்பான்கள் அமைக்க வேண்டும்.

    அபராதம்

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்கவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தவிர்க்கும் பொருட்டு காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி உள்ள பகுதிகளுக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை ஒட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×