என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
    X

    குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

    • போலி மாற்றுத்திறனாளி அடையாள அட்டை விநியோகம் செய்ததால் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபர்கள் போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர்.

    அவர்கள் மீதும், போலி மருத்துவ சான்றிதழ் வாங்கி கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக போலி சான்றிதழ் மூலம் தேசிய அடையாள அட்டை பெற்ற குடியாத்தம் தாலுகா லட்சுமணாபுரத்தை சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணையும், போலி சான்றிதழ் மூலம் பலருக்கு அடையாள அட்டை வாங்கி கொடுத்த வேலப்பாடியை சேர்ந்த தினகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் போலி சான்றிதழ் மூலம் சிறுவனுக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்று கொடுத்ததாக காட்பாடி கழிஞ்சூர் இ.பி.காலனியை சேர்ந்த ஆவின் பாஸ்கரை (வயது 46) கைது செய்தனர்.

    ஆவின் பாஸ்கர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஆவின் பாஸ்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணை வேலூர் ஜெயிலில் உள்ள ஆவின் பாஸ்கரிடம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×