search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடி அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கதிர் ஆனந்த் எம்.பி. ஆய்வு
    X

    காட்பாடி அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கதிர் ஆனந்த் எம்.பி. ஆய்வு

    • உணவு சரியாக வழங்கப்படுகிறதா? என மாணவர்களிடம் கேட்டறிந்தார்
    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது என்றார்

    வேலூர்:

    வேலூர்மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் ஜாப்ரா பேட்டை நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் செயல்ப டுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் திடீரென ஆய்வு செய்தார்.

    மேலும் மாணவர்களுக்கு வழங்கபடும் உணவை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா? நன்றாக இருக்கிறதா? என மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் கதிர்ஆனந்த் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சரால் காலை உணவு திட்டம் மாநகராட்சி பள்ளி களில் தொடங்கப்பட்டு அதனை கிராமப்புற பள்ளி களிலும் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது. மாணவர்களிடம் கேட்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது. காலை உணவு திட்டம் தொடங்கபட்ட பின்னர் தலைமை ஆசிரி யர்களும், மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது தவிர்க்கபடுகிறது.

    மாணவர்கள் வருகையும் உயர்ந்துள்ளது. உதயசூ ரியனை கைகளால் மறைக்க முடியாது. முதல்வரின் திட்டங்கள் எல்லா தரப்பு மக்களிடத்திலும் மீண்டும், மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை நிலைநாட்டுகிறது.

    முதல்வர் என் கடன் பணி செய்கிடப்பதே என்ற வகையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிற்கு எடுத்துகாட்டாக இந்த திட்டம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×