search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர், திருவண்ணாமலை உள்பட 4 மாவட்டங்களில் முதல் நாளில் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள்
    X

    திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுமுறை முடித்து பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்ற போது எடுத்த படம்.

    வேலூர், திருவண்ணாமலை உள்பட 4 மாவட்டங்களில் முதல் நாளில் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள்

    • கலெக்டர் பாட புத்தகங்களை வழங்கினார்
    • மாணவ சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது

    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி திறந்த முதல் நாளிலே மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

    தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டன. விடுமுறை காலத்தில் அவர்கள் தேர்வில் பெற்ற தேர்ச்சியையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுவிட்டது.

    கடந்த மாதம் இறுதியில் வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கி, இந்த மாதம் தொடக்கத்தில் உக்கிரத்தை காட்டியது.

    தமிழ்நாட்டில் வேலூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவானது. அனல் காற்றும் சேர்ந்து வீசியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு, பள்ளி திறப்பு தேதி 2-வது முறையாக தள்ளி வைக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியானது.

    அந்த வகையில், 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இன்றும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதியும் நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதில் வேலூர் மாவட்டத்தில் 1,266 பள்ளிகள், திருவண் ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 55 பள்ளிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 980 பள் ளிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,168 பள்ளி. கள் என 4 மாவட்டங்க ளில் 5 ஆயிரத்து 469 பள்ளிகள் உள்ளன.

    இந்த பள்ளிகளில் கடந்த சில நாட்களாக வகுப்பறைகளை முழு அளவில் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்றது. கழிவறைகள், குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை உட் பட 4 மாவட்டங்களில் கோடை விடுமுறை முடிந்து, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்தனர்.

    பள்ளிகளில் நீண்ட இடைவெளிக்கு பின்பு சந்தித்த தனது சக மாணவர்களை அரவணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அனைத்துப் பள்ளிகளிலும் நேற்று முதல் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    அதன்படி வேலூர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பாட புத்தகங்களை வழங்கினார். அரசு பள்ளிகளில் முதல் நாளான இன்று மாணவ சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது.

    Next Story
    ×