என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்
    X

    அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்

    • கலெக்டர் உத்தரவு
    • கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

    வேலூர்:

    தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் வருகிற 15- ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் நடத்தப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இக்கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் ( 2022-ஏப்ரல் முதல் 2022-ஜீலை முடிய ) குறித்து விரிவாக விவாதித்தல், குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி, சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    மேற்படி கிராம சபைக்கூட்டங்களில் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள உத்தரவி டப்பட்டுள்ளது. மேலும், கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×