என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் ஆ.ராசா எம்.பி.யை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
குடியாத்தத்தில் ஆ.ராசா எம்.பி.யை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
- இந்து முன்னணி சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே இந்துக்களையும், இந்து தெய்வங்களையும் அவதூறாக பேசி இழிவு படுத்தி வரும் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவை கைது செய்து அவரது பதவியை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டி.கே.தரணி தலைமை தாங்கினார். இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில செயலாளர் வி. ரத்தினகுமார் கண்டன உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சோமசுந்தரம், வக்கீல் சந்திரமவுலி, ஹரிஷ், மணிகண்டன், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர் ராசா எம்பிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






