என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதில் புளூடூத் வைத்து தேர்வு எழுதிய வாலிபர் கைது
- கண்காணிப்பாளர் புகார்
- போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்
வேலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள 1,083 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த சனிக்கிழமை நடந்தது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில், டி என் பி எஸ் சி தேர்வு எழுதிய விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ்(27), தனது வலது காதில் பேண்டேஜ் அணிந்து வந்திருந்தார். அவர்
தேர்வு எழுதிக்கொண்டி ருந்த போது, அப்துல் பயாஸ் தனியாக யாருடனோ பேசுவதை உணர்ந்த தேர்வு கண்காணிப்பாளர் சரளா, அவர் காதில் ஒட்டி இருந்த பேண்டேஜ் அகற்றுமாறு கூறியுள்ளார்.
அப்போது அவர் காதில் புளூடூத் பொருத்தி, அதன் வழியாக வெளியே இருக்கும் வேறு ஒருவரிடம் கேள்விக்கான விடை கேட்டு எழுதியது தெரியவந்தது.
இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் சரளா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக இருந்த அப்துல் பயாசை கைது செய்து, போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.






