என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடலில் கல்லை கட்டி கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
- திருமணமாகாத விரக்தியில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்தார்
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேகர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அந்த கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள விவசாயக் கிணற்றில் சேகர் பிணமாக மிதந்தார். வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த சேகர் உடலை மீட்டனர்.
சேகர் கட்டியிருந்த லுங்கியில் சுமார் 25 கிலோ எடை கொண்ட கருங்கல் கட்டப்பட்டிருந்தது. இதனால் கருங்கல்லை கட்டி அவரை யாரும் கிணற்றில் தள்ளினார்களா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருமணமாகாத விரக்தியில் சேகர் லுங்கியில் கருங்கல் கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






