என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் அரசு மருத்துவமனை ரூ.40 கோடியில் கட்டப்படுகிறது
    X

    குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக கட்டப்பட உள்ள கட்டிடங்களின் வரைபடத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

    குடியாத்தத்தில் அரசு மருத்துவமனை ரூ.40 கோடியில் கட்டப்படுகிறது

    • 9400 சதுர மீட்டரில் 5 மாடிகள் கொண்டது
    • கலெக்டர் ஆய்வு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென பல ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து தமிழக அரசு குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான நவீன வசதிகளின் கூடிய கட்டிடங்கள் கட்ட 40 கோடி ரூபாயை ஒதுக்கியது.

    நேற்று காலையில் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் குடியாத்தத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடங்கள் கட்டுவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார்.

    குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், பொதுப்பணித்துறை கட்டடங்கள் பிரிவு செயற்பொறியாளர் ஜெயராமன், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மருத்துவஅலுவலர் எம். மாறன்பாபு அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

    குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கட்டப்படவுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை 9400 சதுர மீட்டரில் 5 மாடிகள் கொண்ட கட்டிடமாக கட்டப்பட உள்ளதுள்ளது இந்த மருத்துவமனை கட்டிடங்களில் தற்போதைய நவீன மருத்துவ வசதிகளுக்கு ஏற்ப மருத்துவமனை கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், அரசு வழக்கறிஞர்கள் பாண்டியன், லோகநாதன் உள்பட அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    Next Story
    ×