search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

    • இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 25 டன் பீன்ஸ் மட்டுமே விற்பனைக்கு வந்தது.
    • கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.50-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஊட்டி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினசரி 70 டன் அளவுக்கு பீன்ஸ் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் தற்போது அதன் வரத்து பாதியாக குறைந்ததால் பீன்ஸ் விலை திடீரென அதிகரித்தது. அதன் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது .

    இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 25 டன் பீன்ஸ் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரையும் விற்கப்படுகிறது.

    இதேபோல் வரத்து குறைவால் அவரைக்காய் கத்தரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உச்சம் அடைந்து உள்ளன.

    கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.50-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது. ஆனால் திண்டுக்கல், தேனி, ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய பகுதிகளில் பெய்த கோடை மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பெரும்பாலான முருங்கை மரங்கள் சேதமடைந்தன.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் முருங்கைக்காய் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.90-க்கு எகிறி உள்ளது. சில்லரை விற்பனை கடையில் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முருங்கைக்காய் ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.

    வரத்து குறைவால் அவரைக்காய் விலையும் அதிகரித்து உள்ளது இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ அவரைக்காய் ரூ.80-க்கும், சில்லரை விற்பனை கடையில் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது.

    இதேபோல் நாட்டு தக்காளி ரூ.30-க்கும், இஞ்சி-ரூ.200, உஜாலா கத்தரிக்காய்-ரூ.80, வரி கத்தரிக்காய்-ரூ.60, வெண்டைக்காய்-ரூ.60, ஊட்டி கேரட்-ரூ.70 க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×