search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் பாலவிநாயகர் கோவில் வருசாபிஷேக விழா
    X

    வருசாபிஷேக விழா நடந்தபோது எடுத்த படம்.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் பாலவிநாயகர் கோவில் வருசாபிஷேக விழா

    • வருசாபிஷேக விழாவை முன்னிட்டு காலையில் பால விநாயகர் கோவிலில் லட்சுமி பூஜை, யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    • கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை கணேசன் பட்டர், அய்யர் ஆறுமுகநயினார் தலைமையில் நடத்தி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்புரம் அமைந்துள்ள பாலவிநாயகர் கோவில் கடந்த 2021-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு வருசாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை நடைபெற்ற வருசாபிஷேக விழாவை முன்னிட்டு காலையில் பால விநாயகர் கோவிலில் வேத ஆகம விதி முறைப்படி மகா கணபதி பூஜை, லட்சுமி பூஜை, கும்ப பூஜை, யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை கணேசன் பட்டர், அய்யர் ஆறுமுகநயினார் தலைமையில் நடத்தி வைத்தார். பின்பு பாலவிநாயகருக்கு சிறப்பு அலங்காரத்தில் மதிய பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆணையாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பிரேமா, சத்துணவு மேலாளர் தனலட்சுமி, ஒன்றிய பொறியாளர் வெள்ளபாண்டியன், மேலாளர் மகேந்திரபிரபு, மகராஜன், ஆறுமுகநயினார், அருள்செல்வன், முருகபெருமாள், அழகப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், வரண்டியேல் ஊராட்சி துணை தலைவர் அருண், ஊராட்சி செயலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×